Wednesday, April 21, 2010

எங்கே போனது மனிதநேயம்?


இந்த தலைப்புடன் ஒரு செய்தியை நான் இன்று ஒரு செய்தித்தாளில் பார்த்தேன் 

மதுரை கிருஷ்ணபுரம் காலனி அருகே இரவு நேரத்தில் ஒருமுதியவரை யாரோ இரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துவந்து பஸ் ஸ்டாண்டில் விட்டு விட்டு சென்று உள்ளார்கள் 

இதற்க்கு காரணம் அவர்களின் குழந்தைகள் அவரை பார்த்துக்கொள்ள முடியாமல் அங்கு வந்து விட்டு இருப்பார்கள் என நினைப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது 

உலகம் எங்கே செல்கிறது பெற்ற தாய்,  தந்தையை கூட பார்த்துக்கொள்ள முடியாத எந்தனையோ நாய்கள் இந்த உலகத்தில் இருக்கிறதுஅந்த முதியவரிடம் எல்லாரும் கேட்டார்களாம் உங்களின் ஊர் எது? உங்களை யார்வந்து இங்கு விட்டது? என்று எல்லாம் கேட்டு இருக்கிறார்கள் ஆனாலும் அந்த முதியர் ஒன்றுமே சொல்லவில்லையாம் 

அந்த முதுகெலும்பு இல்லாத மகன் அல்லது மகள் பெயரை சொல்ல அவர் வாய் கூசியதோ  என்னவோ

அவனுக்கு தெரியாதுபோல இன்னும் ஓரிரு வருடங்களில் இவனும் அல்லது இவளும் முதுமை அடையக்கூடும் 

அவனுடைய குழந்தைகளும் அவனை இதுபோல எங்காவது விட்டுசெல்ல நேரும் அப்போது தெரியும் 

நிம்மதி இல்லை நிம்மதி இல்லை என்று நித்தியானந்த போன்ற சாமியார்களிடம் சென்று.

இருக்கும் பொன் பொருட்களை எல்லாம் விட்டு விட்டு வருகிறார்கள்

கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது கோயில்களுக்கு சென்று வருகிறார்கள் 

எல்லாம் எதற்காக? புண்ணியத்திற்காக , இந்த உலகத்தில் நன்றாக வாழவேண்டும் என்றும்!!  

பெற்ற தாய்,  தந்தையை பாதுகாத்து அவர்களின் கடைசிகாலத்தில் அவர்களின் தேவையை பூர்த்திசெய்தால் எல்லாவகையான செல்வங்களும் நம்மை வந்து சேரும் 

அது தெரியாத நாய்கள் இருக்கும் வரை இதுபோல வயதான முதியவர்கள் கஷ்ட படுவது யாராலும் தடுக்க முடியாது 

பணத்தால் தள்ளிவைக்க, தவிர்க்க முடியாதது முதுமை. 
அனுபவங்களின் உறைவிடம், பொக்கிஷம் முதுமை. 
அனைவரும் ஒரு நாள் இறங்க வேண்டிய வாழ்க்கை நிறுத்தம் இது. 
முதுமையை ஆதரிப்போம்! முதுமைக்கு தலை வணங்குவோம்!!

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வதை விட , கண்ணுக்குத் தெரிந்த கடவுள் ஆன தாய் தந்தைக்கு சேவை செய்ய வேண்டும்!!

-நிதிவாணன் 

 

Tuesday, April 20, 2010

ஒரு பயணத்தின் போது


அது ஒரு அருமையான நாள் சனிகிழமை இரவு நேரம் என்னுடைய நண்பனை பார்க்க நான் பூங்கா நகரம் பெங்களூர் இல் இருந்து கோவைக்கு சென்றேன்.
அன்று நானும் என்னுடைய நண்பன் ஆனந்தும் சேர்ந்து ஊட்டி செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம் அதை போல நங்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

அதுவே என்னுடைய முதல் பயணம் ஊட்டிக்கு அதனால் என்னுடைய கற்பனை உள்ள ஊட்டியை  ஒருமுறை நினைத்து கொண்டு அவனுடன் பயணப்பட்டேன் காலை சரியாக 12.30 மணியளவில் ஊட்டியை அடைந்தோம்.

நான் கட்டிய கற்பனை ஊட்டி உடைந்து போனது. நான் நினைத்ததுபோல் அங்கு ஒன்றுமே இல்லை. ஒரு அழகிய தோட்டம், படகு சாலையில் அந்த அளவு நீர் இல்லை.


இருந்தாலும் நான் கொண்டு சென்ற கேமராவை வைத்து ஒன்று இரண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் ஊட்டி  விட்டு கோவைக்கு புறப்பட்டோம்.

நாங்கள் வரும்போது வெயிலின் தாக்கம் குறைந்து விட்டது குளிர்ந்த காற்று அடிக்க தொடங்கியது. இருசக்கர வாகன பயணம் என்பதாலும் குளிர்ந்த காற்று என்பதாலும் நான் கோவையை வந்து அடையும் முன்பே என்னுடைய உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது ஒருவழியாக கோவையை வந்து அடைந்தோம்.


அந்த மாற்றம் ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க வச்சிடுச்சு. ஒரு வழியா அடுத்த நாள் என்னுடைய நண்பன் எனக்கு தனியாருக்கு சொந்தமான குளிர் சாதனா வசதி உடைய பஸ்ஸில் டிக்கெட் எடுக்க போனான்.

நான் எப்படி பட்டவன் என்றால் அதிகம் செலவு செய்யக்கூடாது என்று நினைத்து தினமும் டி, காபி, புகைபிடிப்பது என்று தினமும் 40 முதல் 50 வரை செலவு செய்யும் ஒரு புத்திசாலி.

அதனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு நான் தமிழ்நாடு அரசு உணவகம் நில்லா பேருந்தில் சேலம் சென்றேன் நான் சேலத்தை அடையும் போது மணி சரியாக இரவு 12.00 மணி.

சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர் பஸ்ஸில் அமர்ந்த பின்னர் என்னுடைய பையை பார்க்கிறேன், பணம் இல்லை!!


என்னை அறியாமல் எங்கோ திருடு போயிருந்தது. உடனே என்னுடைய கையில் இருந்த 10 ரூபாய்க்கும் 3 சிகெரெட் வாங்கி இருந்த 10 ரூபாயையும் செலவு செய்தேன்.

பின்னர் என்னுடன் வேலை செய்த ஒருவர் சேலத்தில் இருந்தார் அவருக்கு போன்செய்தேன் என்னுடைய நல்ல நேரம் அவர் ஊரில் இல்லை என்றும் காலை 5 மணி வரை காத்திருந்தால் அவருடைய தந்தையை அனுப்புகிறேன் என்றார்.

எல்லாரையும் போல நானும் மிகப்பெரிய பொறுமைசாலி (மனித்துவிடுங்கள் பொறுமை கொஞ்சமும் இல்லாதவன் நான்) உடனே என்னுடைய அலுவலகத்திற்கு போன் செய்தேன்.


என்னுடைய நல்ல நேரம் மீண்டும் தலை தூக்கியது வேறு ஒன்றும் இல்லை என்னுடைய போன் Off ஆகிவிட்டது.

ஒருமணிநேரம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டு இருந்தேன் பின்னர் ஒரு முடிவு எடுத்தேன் கையில் இருக்கும் கைபேசி அல்லது புகைப்படக்கருவி எதாவது ஒன்றை விற்று விடலாம் என்று முடிவு செய்தேன்.

உடனே அருகில் நின்று கொண்டு இருந்த பஸ் நடத்துனரிடம் நடந்ததை சொல்லி என்னை பெங்களூர் இல் விட்டு விடுங்கள் அதற்கு பதிலாக இந்த கைபேசியை வைத்து கொள்ளும் படி அவரிடம் சொன்னேன்.

அவர் உடனே தம்பி அதெல்லாம் வேண்டாம் உன்னால் இந்த டிக்கெட்டின் பணத்தை பெங்களூர் இல் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.

நானும் முடியும் என்று சொன்னேன் பணம் கொடுக்காத எனக்கு தான் முதல் பயண சிட்டை தந்தார் அந்த நல்ல மனிதர் அவருடைய கைபேசியை வாங்கி அதில் என்னுடைய SIM card ஜ போட்டு என்னுடன் வேலைசெய்யும் ஒருவருக்கு போன் செய்தேன்.

அவர் என்னுடைய அழைப்புக்கு பதில் கொடுக்க வில்லை அவர் மீது எந்த தவறும் இல்லை காரணம் அப்போது மணி மதிய ராத்திரி 02.00 மணி இருக்கும் 


அப்போது அந்த நடத்துனர் சொன்ன வார்த்தை இன்னும் என்னுடைய நினைவில் இருக்கிறது "தம்பி அவர் வரவில்லை என்றாலும் பரவயில்லை மனிதனுக்கு மனிதன் உதவி செய்யவில்லை என்றால் எப்படி பரவ இல்லை நீ முதலில் தூங்கு" என்றார்.

காலை 06.00 மணி பஸ் பெங்களூரை அடைந்தது உடனே மறுபடியும் அந்த நபருக்கு போன் செய்து அவரை வரவழைத்து பணத்தை நடத்துனரிடம் கொடுத்தேன் என்னுடைய நன்றியை சொன்னேன்.

இன்று அந்த முகம் மறந்தாலும் இன்னும் அவர்செய்த உதவியை மறக்க வில்லை!!