Wednesday, April 25, 2012

ஜீன்ஸ்

இன்று காலை தான் என்னுடைய நண்பனிடம் மண்ணுக்குள்ள போகுரதுக்குள்ள ஜீன்ஸ் பேண்ட் போடணும் என்று சொன்னேன் (நான் இதுவரை ஜீன்ஸ் பேண்ட் போட்டதே கிடையாது) அதன் பிறகு எங்கு சென்றாலும் எங்கு பார்த்தாலும் ஒரே ஜீன்ஸ் பேண்ட்டா தான் கண்ணுல மாட்டுது சரி இதுல்லாம் ஓகே என்று பேப்பர் படித்தால் அதுலையும் ஜீன்ஸ் என்ன கொடும சார் னு நினைத்துக் கொட்டிருக்கும் பொது ஒரு யோசனை. நம்ம தான் ப்ளாக் எழுதி ரொம்ப நாள் ஆச்சே இன்னைக்கு ஜீன்ஸ் பத்தியே எழுதுவோம் என்று நினைத்துக் கொண்டு இந்த பதிவை எழுதுகிறேன்.

இந்த பதிவு என்னுடைய கண்டுபிடிப்பு இல்லை நான் படித்த வார பத்திரிகையில் சுடப்பட்டது.

இந்த ஜீன்ஸ் அறிமுகமாகி, நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது

நாளாக நாளாக மவுசு கூடுகிறதே தவிர, குறையவில்லை.

Mummy Cut Jeans
ஜீன்ஸ் தயாரிக்கப்படும் துணியின் பெயர் டெனிம். பிரான்ஸ் நாட்டில் ஒரு நகரின் பெயர் நைம்ஸ். இங்கு தான் பருத்தி இழை கொண்டு இத்துணி நெய்யப்பட்டு, பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

Boot Cut Jeans
நைம்ஸ் என்பதை, பிரெஞ்சு மொழியில், "டி-நைம்ஸ்' என்பர். இதுவே, சுருங்கி, டெனிம்ன்னு ஆகிப் போச்சு... டெனிம் துணிகளை, வட அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஜெனோவா நகரில் ஓர் அலுவலகம் செயல்பட்டது.

Skinny fit jeans
இந்த ஜெனோவா என்ற சொல்லிலிருந்தே, டெனிம் துணிகளுக்கு ஜீன்ஸ் என்ற பெயர் ஏற்பட்டது. ஜீன்சை கண்டுபிடித்தவர், ஒரு ஜெர்மானியர்!

straight-jeans
டெனிம் துணிகள் முரட்டுத் தன்மைக்குப் பெயர் பெற்றவை. அமெரிக்காவைக் கண்டு பிடிக்க, கொலம்பஸ் சென்ற போது, அவர் சென்ற கப்பலில், இந்த டெனிம் துணி தான், பாய்களாகப் பயன்படுத்தப்பட்டன.

Maternity Jeans
தங்கத்தைத் தேடி அலைந்த அமெரிக்கர்கள் சிலர், ஆங்காங்கே கூடாரம் அமைத்துத் தங்க, இந்தத் துணியையே பயன்படுத்தினாங்க... அத்துடன், அவர்கள் ஓட்டிச் செல்லும் வண்டிகளை மூடவும் இது பயன்பட்டது.

Tapered jeans
சுரங்கத் தொழிலாளிகள், கடும் உழைப்பினால், அவர்கள் அணியும் கால்சட்டைகள் சீக்கிரமாகக் கிழிந்து விடுகின்றன என்பதால், முரட்டு டெனிம் துணியில், கால்சட்டைகள் தைத்து அணியத் துவங்கினாங்க.
அவை தரம் வாய்ந்ததாகவும், நீடித்து உழைப்பவையாகவும் இருந்ததால், இந்தப் பேன்ட்டுகளுக்கு, தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, இளைஞர்களும், இதை பேஷன் உடையாக விரும்ப ஆரம்பிச்சாங்க. இது அந்த பத்திரிக்கையில் இருந்தது ஆனால் Google சர்ச் செய்துபார்த்தால் ஜீன்ஸ் Cow Boy களுக்காக தயாரிக்க பட்டதாக உள்ளது

இந்த ஜீன்ஸ்கள், 1873ல் வடிவமைக்கப்பட்டு, உரிய முறையில் பதிவு செய்யப்பட்டது. அறிமுகமான சூட்டோடு, ஜீன்ஸ் விற்பனையும் சூடு பிடித்துக் கொண்டது. இருப்பினும், அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த ஜீன்ஸ், ஐரோப்பாவுக்கு வர, 50 ஆண்டுகள் பிடித்தன.

முன்னேறிய நாடுகள் அனைத்திலும், 1970ல் ஜீன்ஸ் முக்கிய ஆடையாகக் கருதப்பட்டது.
இந்தியாவில் ஜீன்ஸ் உடைகளுக்கு, இன்றும் அமோக வரவேற்பு உள்ளது. காலத்தை வென்று நிற்கும் துணி வகை, ஜீன்ஸ் தான். இதன் பிறகு வந்த டெர்லின், ஸ்பன், பாலியஸ்டர் எல்லாம் கூட, மதிப்பிழந்து விட்டது.

சொல்ல மறந்துட்டேன் இந்த வருஷம் எப்படியாவது ஜீன்ஸ் வாங்கியே ஆகணும்.

1 comment: