Wednesday, September 8, 2010

என்னத்த சொல்ல!!!


இன்று காலை நான் அலுவலகத்திற்கு வந்த உடன் என்னுடன் பணிபுரியும் சக நண்பர்கள் என்னிடம் வந்து பக்கத்து தெருவில் சாமி வந்திருக்கிறது பார்த்து விட்டு வருவதாக சொன்னார்கள் 

நானும் நம்ம ஊரில் வரும்ல அதை போல சாமி ஆடிக்கொண்டு வருவார்கள் அவர்கள் காலில் மஞ்சள் தண்ணி ஊத்தி வழிபடுவர்கள் அல்லவா அது போல தான் இருக்கும் அதை தான்  பார்க்க செல்கிறார்கள் என்று நினைத்தேன் 

ஆனால் அங்கு சென்று பார்த்தால் அங்கு வந்திருந்தது ஒரு பசு மாடு பார்பதற்கு நம்ம  ஊரு பும் பும் மாடுபோல் இருந்தது 

ஆனால் இது அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது நம்ம ஊரில் வீடு வீட்டுக்கு சென்று கொட்டடித்து இந்த வீட்டில் நல்ல காரியம் நடக்குமா? என்று கேட்டு விட்டு அந்த கொட்டை அடிப்பார்கள் அதுஉம் தலலையை ஆட்டும் அதற்கு  ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்லது அரிசி எதாவது ஒன்றை கொடுத்து அனுப்புவார்கள்.

அந்த காசு கொடுப்பதற்கு காரணம் அந்த பசுவின் உடலை பார்த்துதான் காரணம் அதைபார்க்கவே பாவமாக இருக்கும் இன்றோ நாளையோ சாகபோரமாதிரி இருக்கும். அவர்கள் எடுப்பது ஒருவகை பிச்சை தான்.

ஆனால் இங்கு நான் பார்த்த அந்த பசு மிகவும் ஆரோக்கியத்தோடு இருந்தது இந்த பசு யாரையும் தேடி செல்வது இல்லை.

இந்த பசு இருக்கும் இடத்திற்கு தான் ஊரே வருகிறது அது நிற்க்கும் இடத்திற்கு காலில் செருப்பு போட்டுக்கொண்டு போக கூடாது சொல்லப்போனால் அது இருக்கும் இடம் ஒரு கோவில் போல் இருக்கிறது.

அதன் காலில் வெள்ளி கொலுசு முகத்திலும் வெள்ளியால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது!!

மிக முக்கியமான ஒன்று அந்த பசுவின் மீது குறைந்தது சுமார் பத்து லட்சம் ரூபாயாவது இருக்கும் அதை பார்த்ததும் எனக்கு மிகுந்த ஆச்சரியம் உடனே என்னுடைய செல்லில் நான் புகைப்படம் எடுத்தேன் அதை பாருங்கள் 

பின்னர் அந்த பசுவை (அந்த தெய்வத்தை) பற்றி எல்லாரிடமும் கேட்டு பல தகவல்களை தெரிந்து கொண்டேன்  

இந்த பசுவின் முன்னால் நமக்கு என்ன நடக்க வேண்டுமோ அதை நினைத்துக்கொண்டு  கைகளை நிட்டினால் அது நாம் கைமீது கால்களை வைத்தால் நாம் நினைத்து நடக்குமாம். நாம் நினைத்தது நடக்காது என்றால் நாம் கை மிது கால் வைக்காதாம் 

அதுபோல அந்த பசுவின் முன்பு படுத்துக்கொண்டால் நாம் நினைத்தது நடக்கும் என்றால் அந்த பசு நம்மை தாண்டும் இல்லை என்றால் தாண்டாதாம் 

அது தலையில் இருக்கும் ரூபாய் நோட்டு கிழே விழுந்தாலும் விழுந்த இடத்தில் அப்படியே நின்று விடுமாம்

அதன் தலையில் இருந்து யாராவது பணத்தை எடுத்தாலும் அவர்களின் விடு முன்னால் போய் நின்று விடுமாம் அவர்கள் பணத்தை தரும் வரை அங்கேயே இருக்குமாம்.

இந்த பசுவின் தலை மேல் இருக்கும் பணத்தை ஒரு முறை வங்கியில் செலுத்தி உள்ளனர் அந்த பணத்தை அதன் தலை மேல் வைக்கும் வரை வங்கியின் முன்னால் இருந்து போகவே இல்லையாம்  

இந்த கடவுளுக்கு கோவில் கர்நாடக மாநிலம் மண்டிய மாவட்டம் மதூர் என்ற ஊரில் கோவில் இருக்கிறதாம் 

என்னத்த சொல்ல??

Monday, May 10, 2010

தாயின்றி அமையாது உலகு..

அதுதான் தாய் 
==============


மழையில் நனைந்துகொண்டு விட்டுக்கு சென்றேன்.,

எதற்கு குடை எடுத்து செல்லவில்லை? என்று அண்ணன் கேட்டான்,

மழை நின்றபின் வரவேண்டியது தானே என்று சகோதரி ஆலோசனை சொன்னாள்,

உனக்கு எல்லாம் சுரம் வந்து அவதி பட்டா தான் தெரியும் என்று அப்பாவின் திட்டு,

என்னுடைய தலை முடியை துவட்டும் பொது என் தாய் திட்டினாள்,

என் மகன் விட்டுக்கு வரும் வரை காத்திருக்க முடியாதா? 

என்று மழையை!

அவள் தான் தாய்!!

அவள் (தாய்) இன்றி அமையாது உலகு
அவள் தான் என் உலகம்

Wednesday, May 5, 2010

பொறியாளர்கள் இல்லாத ஒரு உலகம்



பொறியாளர்கள் இல்லாத ஒரு உலகம்

Electronics Engineers

Mechanical Engineers

Civil Engineers

Communication Engineers

Computer Engineers

Aeronautical Engineers

Electrical Engineers

Wednesday, April 21, 2010

எங்கே போனது மனிதநேயம்?


இந்த தலைப்புடன் ஒரு செய்தியை நான் இன்று ஒரு செய்தித்தாளில் பார்த்தேன் 

மதுரை கிருஷ்ணபுரம் காலனி அருகே இரவு நேரத்தில் ஒருமுதியவரை யாரோ இரவு நேரத்தில் ஆட்டோவில் அழைத்துவந்து பஸ் ஸ்டாண்டில் விட்டு விட்டு சென்று உள்ளார்கள் 

இதற்க்கு காரணம் அவர்களின் குழந்தைகள் அவரை பார்த்துக்கொள்ள முடியாமல் அங்கு வந்து விட்டு இருப்பார்கள் என நினைப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது 

உலகம் எங்கே செல்கிறது பெற்ற தாய்,  தந்தையை கூட பார்த்துக்கொள்ள முடியாத எந்தனையோ நாய்கள் இந்த உலகத்தில் இருக்கிறது



அந்த முதியவரிடம் எல்லாரும் கேட்டார்களாம் உங்களின் ஊர் எது? உங்களை யார்வந்து இங்கு விட்டது? என்று எல்லாம் கேட்டு இருக்கிறார்கள் ஆனாலும் அந்த முதியர் ஒன்றுமே சொல்லவில்லையாம் 

அந்த முதுகெலும்பு இல்லாத மகன் அல்லது மகள் பெயரை சொல்ல அவர் வாய் கூசியதோ  என்னவோ

அவனுக்கு தெரியாதுபோல இன்னும் ஓரிரு வருடங்களில் இவனும் அல்லது இவளும் முதுமை அடையக்கூடும் 

அவனுடைய குழந்தைகளும் அவனை இதுபோல எங்காவது விட்டுசெல்ல நேரும் அப்போது தெரியும் 

நிம்மதி இல்லை நிம்மதி இல்லை என்று நித்தியானந்த போன்ற சாமியார்களிடம் சென்று.

இருக்கும் பொன் பொருட்களை எல்லாம் விட்டு விட்டு வருகிறார்கள்

கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது கோயில்களுக்கு சென்று வருகிறார்கள் 

எல்லாம் எதற்காக? புண்ணியத்திற்காக , இந்த உலகத்தில் நன்றாக வாழவேண்டும் என்றும்!!  

பெற்ற தாய்,  தந்தையை பாதுகாத்து அவர்களின் கடைசிகாலத்தில் அவர்களின் தேவையை பூர்த்திசெய்தால் எல்லாவகையான செல்வங்களும் நம்மை வந்து சேரும் 

அது தெரியாத நாய்கள் இருக்கும் வரை இதுபோல வயதான முதியவர்கள் கஷ்ட படுவது யாராலும் தடுக்க முடியாது 

பணத்தால் தள்ளிவைக்க, தவிர்க்க முடியாதது முதுமை. 
அனுபவங்களின் உறைவிடம், பொக்கிஷம் முதுமை. 
அனைவரும் ஒரு நாள் இறங்க வேண்டிய வாழ்க்கை நிறுத்தம் இது. 
முதுமையை ஆதரிப்போம்! முதுமைக்கு தலை வணங்குவோம்!!

கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வதை விட , கண்ணுக்குத் தெரிந்த கடவுள் ஆன தாய் தந்தைக்கு சேவை செய்ய வேண்டும்!!

-நிதிவாணன் 

 

Tuesday, April 20, 2010

ஒரு பயணத்தின் போது


அது ஒரு அருமையான நாள் சனிகிழமை இரவு நேரம் என்னுடைய நண்பனை பார்க்க நான் பூங்கா நகரம் பெங்களூர் இல் இருந்து கோவைக்கு சென்றேன்.




அன்று நானும் என்னுடைய நண்பன் ஆனந்தும் சேர்ந்து ஊட்டி செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம் அதை போல நங்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

அதுவே என்னுடைய முதல் பயணம் ஊட்டிக்கு அதனால் என்னுடைய கற்பனை உள்ள ஊட்டியை  ஒருமுறை நினைத்து கொண்டு அவனுடன் பயணப்பட்டேன் காலை சரியாக 12.30 மணியளவில் ஊட்டியை அடைந்தோம்.

நான் கட்டிய கற்பனை ஊட்டி உடைந்து போனது. நான் நினைத்ததுபோல் அங்கு ஒன்றுமே இல்லை. ஒரு அழகிய தோட்டம், படகு சாலையில் அந்த அளவு நீர் இல்லை.


இருந்தாலும் நான் கொண்டு சென்ற கேமராவை வைத்து ஒன்று இரண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் ஊட்டி  விட்டு கோவைக்கு புறப்பட்டோம்.

நாங்கள் வரும்போது வெயிலின் தாக்கம் குறைந்து விட்டது குளிர்ந்த காற்று அடிக்க தொடங்கியது. இருசக்கர வாகன பயணம் என்பதாலும் குளிர்ந்த காற்று என்பதாலும் நான் கோவையை வந்து அடையும் முன்பே என்னுடைய உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது ஒருவழியாக கோவையை வந்து அடைந்தோம்.


அந்த மாற்றம் ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க வச்சிடுச்சு. ஒரு வழியா அடுத்த நாள் என்னுடைய நண்பன் எனக்கு தனியாருக்கு சொந்தமான குளிர் சாதனா வசதி உடைய பஸ்ஸில் டிக்கெட் எடுக்க போனான்.

நான் எப்படி பட்டவன் என்றால் அதிகம் செலவு செய்யக்கூடாது என்று நினைத்து தினமும் டி, காபி, புகைபிடிப்பது என்று தினமும் 40 முதல் 50 வரை செலவு செய்யும் ஒரு புத்திசாலி.

அதனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லி விட்டு நான் தமிழ்நாடு அரசு உணவகம் நில்லா பேருந்தில் சேலம் சென்றேன் நான் சேலத்தை அடையும் போது மணி சரியாக இரவு 12.00 மணி.

சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர் பஸ்ஸில் அமர்ந்த பின்னர் என்னுடைய பையை பார்க்கிறேன், பணம் இல்லை!!


என்னை அறியாமல் எங்கோ திருடு போயிருந்தது. உடனே என்னுடைய கையில் இருந்த 10 ரூபாய்க்கும் 3 சிகெரெட் வாங்கி இருந்த 10 ரூபாயையும் செலவு செய்தேன்.

பின்னர் என்னுடன் வேலை செய்த ஒருவர் சேலத்தில் இருந்தார் அவருக்கு போன்செய்தேன் என்னுடைய நல்ல நேரம் அவர் ஊரில் இல்லை என்றும் காலை 5 மணி வரை காத்திருந்தால் அவருடைய தந்தையை அனுப்புகிறேன் என்றார்.

எல்லாரையும் போல நானும் மிகப்பெரிய பொறுமைசாலி (மனித்துவிடுங்கள் பொறுமை கொஞ்சமும் இல்லாதவன் நான்) உடனே என்னுடைய அலுவலகத்திற்கு போன் செய்தேன்.


என்னுடைய நல்ல நேரம் மீண்டும் தலை தூக்கியது வேறு ஒன்றும் இல்லை என்னுடைய போன் Off ஆகிவிட்டது.

ஒருமணிநேரம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டு இருந்தேன் பின்னர் ஒரு முடிவு எடுத்தேன் கையில் இருக்கும் கைபேசி அல்லது புகைப்படக்கருவி எதாவது ஒன்றை விற்று விடலாம் என்று முடிவு செய்தேன்.

உடனே அருகில் நின்று கொண்டு இருந்த பஸ் நடத்துனரிடம் நடந்ததை சொல்லி என்னை பெங்களூர் இல் விட்டு விடுங்கள் அதற்கு பதிலாக இந்த கைபேசியை வைத்து கொள்ளும் படி அவரிடம் சொன்னேன்.

அவர் உடனே தம்பி அதெல்லாம் வேண்டாம் உன்னால் இந்த டிக்கெட்டின் பணத்தை பெங்களூர் இல் கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.

நானும் முடியும் என்று சொன்னேன் பணம் கொடுக்காத எனக்கு தான் முதல் பயண சிட்டை தந்தார் அந்த நல்ல மனிதர் அவருடைய கைபேசியை வாங்கி அதில் என்னுடைய SIM card ஜ போட்டு என்னுடன் வேலைசெய்யும் ஒருவருக்கு போன் செய்தேன்.

அவர் என்னுடைய அழைப்புக்கு பதில் கொடுக்க வில்லை அவர் மீது எந்த தவறும் இல்லை காரணம் அப்போது மணி மதிய ராத்திரி 02.00 மணி இருக்கும் 


அப்போது அந்த நடத்துனர் சொன்ன வார்த்தை இன்னும் என்னுடைய நினைவில் இருக்கிறது "தம்பி அவர் வரவில்லை என்றாலும் பரவயில்லை மனிதனுக்கு மனிதன் உதவி செய்யவில்லை என்றால் எப்படி பரவ இல்லை நீ முதலில் தூங்கு" என்றார்.

காலை 06.00 மணி பஸ் பெங்களூரை அடைந்தது உடனே மறுபடியும் அந்த நபருக்கு போன் செய்து அவரை வரவழைத்து பணத்தை நடத்துனரிடம் கொடுத்தேன் என்னுடைய நன்றியை சொன்னேன்.

இன்று அந்த முகம் மறந்தாலும் இன்னும் அவர்செய்த உதவியை மறக்க வில்லை!!

Saturday, March 13, 2010

நித்தியானந்தா - இருந்தாலும் 1000 பொன் இறந்தாலும் 1000 பொன்



நித்தியானந்தா இந்த பெயரை தெரியதவர்களே இருக்க முடியாது காரணம் இப்போது எங்கு பார்த்தாலும் இதே பெயர்.


இவருடன் சேர்த்து ரஞ்சிதாவின் பெயரும்!! அந்த அம்மா சினிமாவில் பெயர் வாங்கியதை விட இந்த செய்தியில் நல்லா பாப்புலர் ஆகிட்டாங்க.



ப்ளாக் பார்ப்பது என்னுடைய பொழுதுபோக்கு, இப்ப ப்ளாக்க பார்த்தாலே தல வலி காரணம் நித்தியானந்தா ரஞ்சிதா.


எல்லாரும் இதையே தான் எழுதுறாங்க (எழுதுபவர்களை மட்டும்)

காமத்தில் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு அழகான பெண் கிடைத்தால் அவனுக்கு அது சொர்க்கம் அதுவே நூறு பெண்கள் கிடைத்தால் அது தான் நரகம்.


அதை போலத்தான் ஒருநாள் அதை படித்தேன் நன்றாக இருந்தது, அதையே மறுபடி மறுபடி பார்த்தால் என்னால முடியல.

ப்ளாக் எழுதுறவங்க எல்லாரும் நல்ல சித்தனை உள்ளவங்க (அப்டின்னு தான் நினைக்கிறேன்), ஆனால் அதையே இப்படி சின்ன சின்ன விசயத்துல விட்டுவிட கூடாது.


சிந்தனை என்பது நதி மாதிரி. ஓடிக்கொண்டே இருந்தால் அது நதி ஒரே இடத்தில் நின்று விட்டால் அதுக்கு பெயர் குட்டை!!

முதல்ல எல்லாரும் சன் டிவி காசு பார்க்குறாங்க விஜய் TV காசு பாக்குறாங்க நக்கீரன் என்று எல்லாரும் எல்லாரையும் விமர்சனம் செய்தார்கள்

இப்ப இவங்க என்ன செய்றாங்க? அவன் முதல் போட்டு இருக்கான் அவன் அதை எடுக்க பார்க்கிறான். 


நீங்க ஒண்ணுமே போடல ஆனாலும் எதுக்காக விழுந்து விழுந்து எழுதுறிங்க Tamilishla Vote வாங்க!!! 


இப்படி பார்த்தால் எல்லாரும் ஒன்னுதான்

ஒரு செய்தி படித்தேன் என்னன்னா நித்தியானந்தா ரஞ்சிதா போட்டோவை Google ல தேடியதில் 10 வது இடம் எல்லாருக்கும் வேற வேலையே இல்லையா இது நாட்டுக்கு ரொம்ப தேவையான ஒரு செய்தி தானா?





இந்த மாதிரி செய்தி போட்டு விட்டில் உள்ள சிறுவர்கள் எல்லாரையும்  கெடுத்திட்டாங்க. 


இதனால இந்த செய்தி வந்த முதல் சில நாட்கள் விட்டில் பெரியவங்க வேலைக்கு செல்லும் பொது கேபிள் இணைப்பை கட் பண்ணிட்டு போனாங்க தெரியுமா உங்களுக்கு? (எனக்கு தெரிந்தவர்கள் விட்டில் கூட நடந்தது)

முதல்ல சொன்னங்க போலி சாமியார்களை மக்கள் எல்லாருக்கும் காட்டுறோம் சரியப்பா காட்டியாச்சு நிறுத்துங்க இன்னும் எதுக்க மறுபடி மறுபடியும்.

விஜய் டிவில "நடந்தது என்ன" நிகழ்ச்சி Sunday சொன்னங்க நாளை என்று ஆனால் அவங்க போட்டது இரண்டு நாள் கழித்து என்னுடைய வேலை முடிந்த பிறகு ப்ளாக் எல்லாம் படித்து விட்டு ரூம்க்கு செல்வது 10 மணிக்கு மேலேதான். 


என்னுடைய நண்பன் சொன்னான் மாமா என்னடா இன்னைக்கு ராத்திரி என்று சொன்னான் ஆனால் இன்னைக்கும் போடலடா என்று இப்[படி சொல்லி சொல்லி ரேட்ட சாஸ்தி பண்ணுறது

நான் ஒன்று சொல்லுகிறேன் நித்தியானந்தா ஒரு யானைக்கு சமம் எப்படி தெரியுமா ???????????????????

அவர் இருந்தாலும் 1000 பொன் (அவருக்கு), இறந்தாலும் 1000 பொன்(மீடியாவுக்கு)!!

அவன்(ர்) நல்லா இருக்கும் பொது அவன் காசு சேர்த்தான் இப்ப அவன் கெட்டவன் ஆன (மாட்டிகிட்ட) பிறகு டிவி பேப்பர் எல்லாருக்கும் நல்லா பணம்..

அய்யா சாமி ப்ளீஸ் வேண்டாம் விட்டுருங்க ப்ளீஸ்

வடிவேலு மாதிரி சொன்னா,
1 . போங்க தம்பி வேறவேலை எதாவதும் இருந்தா பாருங்க!
2 . ஏங்க இப்டி கப்பித்தனமா எழுதிகிட்டு? போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பு! !

Monday, January 18, 2010

காங்கிரஸ் கடலை - பெயர்க் காரணம்

காங்கிரஸ் நூறு கிராம் அப்டின்னு யாராவது பேக்கரில கேட்டு பாத்துருக்கீங்களா?
அப்டி கேட்டா என்ன நடக்கும்னு நெனைக்கிறீங்க?
பெங்களுருல நண்பர் ஒருத்தர் அப்டி பேக்கரில கேட்ட உடனே நா ரொம்ப மெரண்டுட்டேன்,
ஆனா கடைக்காரர்   கொஞ்சம் கார கடலை எடுத்து கொடுத்தார்!!
அப்புறம் தான் நண்பர் அந்த கடைக்கு பெயர் காரணம் சொன்னார்.
முன்னாடி எல்லாம் காங்கிரஸ் கட்சியோட செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில
இந்த மாதிரி வறுத்த நிலக்கடலைல காரம் போட்டு தான் கொடுப்பாங்களாம் நொறுக்கு தீனிக்கு.
அதனால தான் அந்த கடலைக்கு காங்கிரஸ் கடலைன்னு பேராம்.
இது எப்டி இருக்கு?