Wednesday, November 25, 2009

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்

இன்று பிறந்த எம் தலைவா!
என்றும் வாழும் எம் குலக்கொழுந்தே!
எம் இன மானம் காத்த மன்னவனே!
மண்ணின் மைந்தர்களுக்காகவே வாழும் மாவேந்தே!
தமிழருக்கென்று தனி நாடு படைத்த தங்கத்தமிழா!
கொள்கை கொன்று ஆள்வோர் நடுவில்,
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்  என
கொள்கை கொண்டு  ஆளும் எம் அரசே!
தமிழனாய் பிறந்ததற்காய் எம்மை
பெருமை கொள்ளச் செய்த பெருமானே!
மனிதப் பேரவலதிலும், மனித நேயம் காத்த காவலனே!
நீ பிறந்த இனத்தில் பிறந்ததற்காய்
நாமும் பெருமிதம் கொள்கிறோம்!
தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற தமிழா!
உன் பிறந்த நாளில் உன் வேட்கையே
இனி எம் வேட்கை.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்!
எவ்வழியிலாயினும்!!!

Thursday, October 8, 2009

தமிழர்க்கும் வாழ்வேன்!

தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையி¢ருகூறாய்ப்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!"

-நன்றி: 'தமிழ்ச்சிட்டு' - குரல்-8, இசை-12.

Tuesday, October 6, 2009

மானமிழந்த தமிழனுக்கு...

மானமிழந்த தமிழனுக்கு...

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
கெஞ்சி கோவணம் கட்டாதே!
அம்மணமாகவே போராடு,
கோவணம் கிடைக்கும் வரை...

Wednesday, September 23, 2009

தேச(த்தின்) துரோகம்


இந்திய தேச(த்தின்) துரோகம்:

26.09.1987 இந்திய வரலாற்றின் அவமானகரமான நாள்.

இரக்கம் என்பது துளி கூட இல்லாது ஒரு இளம் வாலிபன் இந்திய அரசாங்கத்தால் கொல்லப்பட்ட நாள்.

யாழ் நகரின் அரசியல் பிரிவு தலைவர் லெப் கர்னல் திலிபன் அவர்கள் மறைந்த நாள்.

அவர் செய்தது அறப்போர் தான் மறப்போர் அல்ல.

உண்ணா விரதம் இருந்து உயர் நீத்தார்.

எனக்கு தெரிந்து இந்திய வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் உன்ன விரதம் இருந்து மறைந்ததாக தெரியவில்லை.

அன்னைக்கு காந்திலேர்ந்து இன்னைக்கு கருணாநிதி வரைக்கும் இதே தான் நிலைமை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாக பேசிக்கொள்ளும் இந்திய திரு நாட்டினால் ஒரு இளம் போராளி உயரை விட்ட நாள்.

அமைதியான வழியில் போராடிய ஒரு வீரனுக்கு ஒரு ஜனநாயக தேசத்தால் கொடுக்கப்பட்ட தண்டனை மரணம்.

அன்று முதல் இன்று வரை இந்தியா தனது முடிவில் உறுதியாக இருக்கிறது.

ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தியாவை நம்பி கெட்டவர்கள் ஈழ தமிழர்கள்.  

தியாக தீபம் என்றழைக்கப்படும் திலிபனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.