Wednesday, May 7, 2014

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

இந்திய உச்ச நீதி மன்றம் இன்றைக்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.

முல்லை பெரியார் அணை எத்தனை அடி நீர் தேக்கலாம் என்பதற்கான தீர்ப்பு இது.

142 அடிக்கு தேக்கலாம் என்றும் கேரளா அரசு கொண்டு வந்த சிறப்பு அணை பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து உள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக கேரளா அரசு மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த பிரச்சனையில் கேரளாவின் அனைத்து கட்சிகளும் ஒரே முடிவை எடுத்து உள்ளன ஒற்றுமையாகவும் உள்ளன.

முன்பு வழங்கப்பட்ட உரிமை படி அணை தண்ணீரை பயன்படுத்தும் உரிமையை பறிப்பதற்காகவும், கேரளா அரசு கட்டி உள்ள பிற அணைகளுக்கு நீர் ஆதாரத்தை பெருக்கவும் இந்த முடிவை எடுத்து உள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் 2006 முதல் கேரளா அரசு நீர் தேக்கும் அளவை குறைத்த காரணத்தால் பல்வேறு கட்டடங்கள அணை நீர்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அணையின் நீர் மட்டத்தை முழு கொள்ளளவான 152 அடிக்கு உயர்த்தினால் அனைத்து கட்டடங்களும் மூழ்கும் அபாயம் உள்ளது மற்றும் இதனால் கேரளா அரசுக்கு வருவாய் இழப்பும் கேரளா தொழில் அதிபர்களின் நட்பும் இழக்கும் அபாயம் உள்ளது.

ஆகக்கூடி தொழிலதிபர்களின் நன்மைக்காத்தான் அரசாங்கங்கள் இயங்குகின்றன என்பது இந்த விடயத்தில் தெள்ளதெளிவாக தெறிகின்றது.

கேரளா அரசின் ஆடிட்டர் ஜெனரல் கூட அணை பலமாக இருக்கிறது என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார்.

http://www.firstpost.com/india/mullaperiyar-its-not-about-safety-but-state-sovereignty-147289.html

மேலும் இந்த விடயத்தில் ஊடகங்களின் அரசியலை கவனிக்க வேண்டும்.

எந்த ஒரு தேசிய ஊடகமும் முல்லை பெரியார் அணை என்று எழுதுவது இல்லை. முல்லா பெரியார் என்று தான் எழுதுகின்றன.

இதிலிருந்தே இந்த ஊடகங்களின் நியாய தர்மங்
களை புரிந்து  கொள்ளலாம்.

நதி நீர் இணைப்பு மற்றும் நதிகளை தேசிய மயமாக்குவது ஒன்றே இதற்க்கு எல்லாம் தீர்வாக இருக்கும்.

தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவர்க்கொரு குணமுண்டு!!

வாழ்க தமிழ்!